தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,930க்கு மேலே சென்றால் மட்டுமே நிலைமை தெளிவடையும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,930க்கு மேலே சென்றால் மட்டுமே நிலைமை தெளிவடையும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,930க்கு மேலே சென்றால் மட்டுமே நிலைமை தெளிவடையும்


UPDATED : செப் 12, 2026 03:44 AM

ADDED : செப் 12, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 03:44 AM ADDED : செப் 12, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 207 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி 246 வரை வீழ்ச்சி கண்டது. பின்னர் மீண்டு நாளின் இறுதியில் 79 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டிமைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.10 சதவீத உயர்வுடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.58 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும் 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம்' குறியீடு அதிக பட்சமாக 0.56 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 2.70 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,638 நிறுவனங்களின் பங்குகளில் 1,473 ஏற்றத்துடனும்; 2,039 இறக்கத்துடனும்; 126 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி டெக்னிக்கலாக ஓவர்சோல்டு நிலைமையில் இருக்கிற போதிலும் பியரிஷ் நிலைமையே தொடர்கிறது.

எம்.ஏ.சி.டி., -190.22 என்ற அளவிலும், இ.எம்.ஏ., எம்.ஏ.சி.டி., -115.24 என்ற அளவிலும் இருப்பது இறக்கத்திற்கான மொமென்டம் இருப்பதையே காட்டுகிறது. ஆர்.ஓ.சி., (12) -3.34 என்ற அளவில் இருப்பது விலை ரீதியான மொமென்டம் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.ஐ., (14) 27.22 என்ற அளவில் இருப்பது நிப்டி ஓவர்சோல்டு நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் 13.64 மற்றும் எஸ்.எம்.ஏ., ஸ்டோக்காஸ்ட்டிக் 8.08 என்ற அளவுகளில் இருப்பது ஓவர்சோல்டு நிலை தீவிரமாக இருப்பதை காட்டுகிறது.

பரந்த சந்தை மற்றும் துறை சார்ந்த குறியீடுகளில் பெரும்பாலானவை இறக்கத்தில் முடிந்ததுடன், ஏற்றம் கண்ட பங்குகளைவிட இறக்கம் கண்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் சந்தையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

இவற்றை வைத்து பார்க்கும் போது குறுகிய கால அடிப்படையில் நிப்டி பலவீனமாகவே இருக்கிறது எனலாம். 23,231 என்பது முக்கிய சப்போர்ட் லெவலாக தற்போது இருக்கிறது. 23,231க்கு மேலே நீடித்தால், 23,667-23,722 வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது.Image 1618317

நிப்டி 23,231க்கு கீழே சென்றால் 23,000-22,820 என்ற லெவல்வரை செல்லக்கூடும். மொத்தத்தில், ஓவர்சோல்டு நிலை காரணமாக குறுகிய காலத்தில் சிறியதொரு ஏற்றம் காண வாய்ப்புள்ள போதிலும் 23,930-க்கு மேலே சென்றால் மட்டுமே டெக்னிக்கல் நிலைமை ஏற்றத்திற்கு சாதகமாக மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us