டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை மாற்றம் வர தாண்ட வேண்டிய தடைகள் அதிகம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை மாற்றம் வர தாண்ட வேண்டிய தடைகள் அதிகம்
UPDATED : டிச 17, 2025 03:09 AM
ADDED : டிச 17, 2025 02:16 AM

ஆரம்பம் முதல் தொ டர்ந்து இறக்கத்திலேயே நடைபெற்று வந்த நிப்டி, நாளின் இறுதியில் 167 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.61 சதவிகித இறக்கத்துடனும்; நிப்டி 'ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.92 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' அதிகபட்சமாக 0.55 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட் ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' அதிகபட்சமாக 1.36 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வர்த்தகம் நடந்த 3,211 பங்குகளில், 1,023 ஏற்றத்துடனும்; 2,095 இறக்கத்துடனும்; 93 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. குறுகிய காலத்திற்கான மொமொண்டம் குறைவாக உள்ளது. எனவே, இறக்கம் எப்போது வேண்டுமென்றாலும் நிற்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் டெக்னிக்கலாக 25,800, -25,750 என்ற லெவல்களில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்றம் தொடர 26,050 என்ற லெவலை வால்யூமுடன் தாண்டவேண்டும். 26,100 என்ற ரெசிஸ்டென்ஸ் ஸ்திரமானதாக இருப்பதால், அதை தாண்டிச் செல்வது தற்போதைக்கு சிரமம் என்ற போதிலும், செய்திகள் மிகவும் ஆதரவாக இருந்தால் மட்டுமே அது நடந்துவிட க்கூடும்.






