டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிலையற்ற தன்மை உருவாகவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிலையற்ற தன்மை உருவாகவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது
UPDATED : செப் 24, 2025 02:37 AM
ADDED : செப் 24, 2025 02:17 AM

நிப்டி
ஐ.டி., துறை பங்குகள் தொடர்ந்து இறக்கத்தை சந்தித்தால், சரிவடைந்த நிப்டி, நண்பகலுக்கு மேல் வாகன உற்பத்தித்துறை பங்குகளின் தயவினால், சரிவிலிருந்து மீண்டு, நாளின் இறுதியில் 32 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. நிப்டி ஐ.டி., குறியீட்டில் உள்ள பத்து பங்குகளில் ஏழு பங்குகள், இறக்கத்தை சந்தித்தது. அதேநேரம், வாகன துறை பங்குகளின் விலையை உயரச் செய்தது.
![]() |
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):37.16 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.73, செய்கின் மணி ப்ளோ (21):-0.13 என இருப்பதால், ஏற்றம் வருவதற்கு, நிப்டி முதலில் 25,175 என்ற அளவிற்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகம் ஆகவேண்டும். இந்த நிலையை கடக்க முடியாவிட்டால், இறக்கம் தொடரலாம். பொதுவாக வாலட்டைலிட்டி அதிகமாக உருவாவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
![]() |
நிப்டி பேங்க்
நண்பகல் வரையில் ஓரளவு இறங்கி ஏறிக்கொண்டிருந்த நிப்டி பேங்க், அதன் பின் ஏற ஆரம்பித்து, நாளின் இறுதியில் 225 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 173.67 ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 57.64 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.58 என்ற அளவில் இருக்கும் நிலைமையில், டெக்னிக்கலாக முந்தையதினத்திலிருந்து பெரிய மாற்றம் ஏதும் உருவாகிவிடவில்லை. ஏற்றம் வருவதற்கு 55,445 என்ற அளவுக்கு கிழே செல்லாமல் வர்த்தகம் நடப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.