டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் தொடர சற்று வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் தொடர சற்று வாய்ப்புள்ளது
UPDATED : செப் 19, 2025 11:32 PM
ADDED : செப் 19, 2025 11:31 PM

நிப்டி
நாளின் ஆரம்பத்தில் சிறியதொரு இறக்கத்துடன் 25,410-ல் துவங்கிய நிப்டி, தொடர்ந்து இறக்கத்தை சந்தித்து, 25,286 என்ற குறைந்த பட்ச நிலைக்கு இறங்கி, அதன் பின்னர் இறுதியில் 96 புள்ளிகள் இறக்கத்துடன் 25,327 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):67.26 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):2.48 என இருப்பது, இறக்கம் சற்று தொடர வாய்ப்புள்ளது என்பதை காட்டுவதாக இருக்கிறது.
![]() |
தற்போதைய சூழ்நிலையில், 25,350 என்ற நிலை மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலைக்கு கீழேயே வர்த்தகம் நடந்தால், நிப்டி இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 25,270, 25,210 மற்றும் 25,150 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,410, 25,495 மற்றும் 25,540 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாக கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.
![]() |
நிப்டி பேங்க்
வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இறக்கத்துடன் 55,647 புள்ளிகளி-ல் ஆரம்பித்த நிப்டி பேங்க், பின்னர் 55,355 என்ற குறைந்தபட்ச அளவை அடைந்து, அதைத் தொடர்ந்து சிறிய ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 268 புள்ளிகள் இறக்கத்துடன், 55,458- புள்ளிகளில் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):207.61, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 57.56. மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.57 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் வருவதற்கு 55,500 என்ற அளவுக்கு மேலே சென்று வர்த்தகம் நடக்கவேண்டும்.
தற்போதைய நிலவரப்படி 55,310, 55,170 மற்றும் 55,045 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாக கொண்டும் 55,650, 55,830 மற்றும் 55,960 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாக கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.