டெக்னிக்கலும், சென்டிமென்டும் எதிரும் புதிருமாக உள்ளன
டெக்னிக்கலும், சென்டிமென்டும் எதிரும் புதிருமாக உள்ளன
ADDED : அக் 21, 2025 12:34 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,824.60 25,926.20 25,788.50 25,843.15
நிப்டி பேங்க் 57,872.85 58,261.55 57,872.85 58,033.20
நிப்டி
நாள் முழுவதும் ஏற்றத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 133 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி மைக்ரோகேப் 250' அதிகபட்சமாக 1.00% ஏற்றத்துடனும்; 'நிப்டி நெக்ஸ்ட் 50' குறைந்தபட்சமாக 0.14% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 13 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' அதிகபட்சமாக 2.87% ஏற்றத்துடனும்; நிப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 0.16% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,234 பங்குகளில் 1,882 ஏற்றத்துடனும்; 1,242 இறக்கத்துடனும், 110 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
மீண்டும் புதிய 52 வார உச்சத்தை சந்தித்துள்ள நிப்டியில், ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புகள் இன்னமும் தெரிகிறது. 26,000-த்திற்கு அருகே நிப்டி இருக்கிற சூழலில், 'முகூர்த் டிரேடிங்' நடக்க இருக்கிறது. ஒரு சில மொமெண்டம் இண்டிகேட்டர்கள் ஏற்றத்தை காண்பிக்கின்ற போதும், ஆர்.எஸ்.ஐ., மற்றும் 'ஸ்டோக்காஸ்டிக்ஸ்' சற்று ஓவர்பாட்டாக இருப்பதை காட்டுகிறது. எந்த நேரத்திலும் சிறியதொரு இறக்கம் வந்து போகலாம் என டெக்னிக்கல்கள் காட்டுகிற வேளையில், சந்தையின் செண்டிமென்ட் அதற்கு எதிராக இருக்கிறது.
ஆதரவு 25,775 25,715 25,660
தடுப்பு 25,910 25,990 26,040
நிப்டி பேங்க்
ஏற்றத்தில் துவங்கி, ஏற்றத்தில் நிறைவடைந்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 319 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நல்லதொரு ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதைப் போன்ற டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது என்ற போதிலும், 'ஆர்.எஸ்.ஐ., ஓவர்பாட்' என்ற நிலைமையில் உள்ளது. 58,500-ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது.
ஆதரவு 57,845 57,665 57,520
தடுப்பு 58,235 58,440 58,590
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எட்டர்னல் 338.45 -4.20 2,54,81,979 59.44
ரிலையன்ஸ் 1,467.90 51.10 2,47,21,978 55.42
ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,393.00 -43.60 2,33,30,227 64.06
எச்.டி.எப்.சி., பேங்க் 1,003.60 1.05 2,21,95,202 53.84
டாடா ஸ்டீல் 172.10 -0.12 1,80,49,579 49.29
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எஸ் பேங்க் 22.67 0.42 17,41,76,913 36.42
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட்பேங்க் 76.85 4.97 10,33,43,278 44.33
பெடரல் பேங்க் 227.90 15.52 5,56,14,063 38.15
சுஸ்லான் எனர்ஜி 53.14 0.22 3,44,09,429 51.11
ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 866.45 74.00 2,00,74,420 25.06
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
கரூர் வைஸ்யா 243.00 15.61 1,29,86,559 34.52
பந்தன் பேங்க் 167.15 6.17 1,11,02,986 31.33
சி.இ.எஸ்.சி., 179.10 8.69 92,15,860 38.73
என்.பி.சி.சி., (இந்தியா) 113.60 2.19 74,12,702 40.67
இந்தியா எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 139.00 4.82 73,67,382 42.18
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
ஜைடஸ் வெல்னெஸ் 470.00 40.10 7,38,491
கோதாவரி பவர் அண்ட் இஸ்பாத் 252.20 44.76 16,56,752
தி கர்நாடகா பேங்க் 179.91 45.13 43,74,840
டாடா மோட்டார்ஸ் 399.60 40.99 1,04,71,672
பேங்க் ஆப் இந்தியா 129.90 43.96 2,71,95,370