தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஸ்கிரீன் புரொடெக்டர்'களுக்கு இனி பி.ஐ.எஸ்., சான்றிதழ் அடுத்தாண்டு ஏப்.,1 முதல் அமலாகிறது

 'ஸ்கிரீன் புரொடெக்டர்'களுக்கு இனி பி.ஐ.எஸ்., சான்றிதழ் அடுத்தாண்டு ஏப்.,1 முதல் அமலாகிறது

 'ஸ்கிரீன் புரொடெக்டர்'களுக்கு இனி பி.ஐ.எஸ்., சான்றிதழ் அடுத்தாண்டு ஏப்.,1 முதல் அமலாகிறது


ADDED : செப் 23, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஸ்மார்ட்போன் திரையை பாதுகாக்க பயன்படுத்தப்படும் 'ஸ்கிரீன் புரொடெக்டர்'களுக்கு பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கட்டாய பி.ஐ.எஸ்., சா ன்றிதழ் பெற வேண்டிய பொருட்களின் பட்டியலில் மொபைல் போன்களுக்கான ஸ்கிரீன் புரொடெக்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2027 ஏப்., 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் புரொடெக்டர்களும் 'IS 19348:2025' என்ற இந் திய தர நிர்ணய விதிகளு க்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பி.ஐ.எஸ்., சான்றிதழ் அமைப்பானது, ஸ்கிரீன் புரொடெக்டரின் தடிமன், அளவு, கிளாஸின் வலிமை மற்றும் தரம், ஒட்டும் தன்மை, உடைவதை தடுக்கும் பி லிம், கைரேகை படியாத பூச்சு மற்றும் புளூ-லைட் பில்டரிங் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்யும்.

இந்திய ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் சந்தையில் பிராண்டு இல்லாத மற்றும் தரம் குறைந்த இறக்குமதி டெம்பர்டு கிளாஸ்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்புதிய விதியால் தரம் குறைந்த மற்றும் மலிவு விலையில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தரச்சான்று பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் அல்லது சந்தையை விட்டு வெளியேற நேரிடும்.

நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பி.ஐ.எஸ்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பரி சோதித்து பதிவு செய்ய 7 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us