உள்ளடக்கத்திற்கு செல்ல

‘கேப்பிட்டல் கூட்ஸ்’ குறியீடு நான்கு சதவீதம் சரிந்தது
‘கேப்பிட்டல் கூட்ஸ்’ குறியீடு நான்கு சதவீதம் சரிந்தது
UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 10:54 PM

அ நிறம் | அளவு
நேற்றைய வர்த்தகத்தில் ‘பி.எஸ்.இ., கேப்பிட்டல் கூட்ஸ்’ குறியீடு 4 சதவீதம் வரை சரிந்து, துறைவாரியான குறியீடுகளில் முதன்மை வீழ்ச்சியை கண்டுள்ளது. சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்தபோதிலும், ஜூலை – செப்டம்பர் காலாண்டு முடிவுகள் ஏமாற்றமளித்த காரணத்தினால் இந்த துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
குறிப்பாக, ‘தெர்மாக்ஸ், அஸ்ட்ரால், அபார் இண்டஸ்ட்ரீஸ், சிஜி பவர், டேட்டா பேட்டர்ன்ஸ், ஜி.இ., வெர்னோவா, சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், பாரத் டைனமிக்ஸ்’ போன்ற பங்குகளின் விலை குறைந்தபட்சமாக 3 சதவீதமும், அதிகபட்சமாக 20 சதவீதம் வரையும் சரிவை சந்தித்துள்ளன.
