தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஏற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

ஏற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

ஏற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

22,524.40 22,753.20 22,387.35 22,753.20

நிப்டி 75 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து, –212 வரை இறக்கம் கண்டு, பின்னர் ஏற ஆரம்பித்து சிறு ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகி, நாளின் இறுதியில் 153 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு குறைந்தபட்சமாக 0.40 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 1.60 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 19 குறியீடுகள் ஏற்றத்துடனும், 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம்’ குறியீடு அதிகபட்சமாக 2.34 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி மீடியா’ குறியீடு அதிகபட்சமாக 0.34 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,681 நிறுவனங்களின் பங்குகளில் 2,062 ஏற்றத்துடனும், 1,525 இறக்கத்துடனும், 94 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 14 நாள் சராசரியான (இ.எம்.ஏ.,) 22,769க்கு சற்று கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., இன்னும் நெகட்டிவ்வாகவே இருந்தாலும் சிக்னல் லைனுக்கு மேலே இருப்பதும், பாசிட்டிவ் ஹிஸ்டோகிராம் 50.01 என்ற அளவில் இருப்பதும் சிறியதொரு மீட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆர்.ஓ.சி., (0.66) சிறிய மீட்சி வரக்கூடும் என்பதை காட்டுகின்றது. ஆர்.எஸ்.ஐ., 46.08 என்ற அளவில் 50க்கு கிழே இருப்பதும், ஸ்டோக்காஸ்ட்டிக் 32.42 என்ற அளவில், அதன் சிக்னல் லைனான 35.34க்கு கீழே இருப்பதும், ஏற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டுகின்றன.

தற்போதைய டெக்னிக்கல் சூழலில் நிப்டி 22,845க்கு மேலே சென்று நிலைத்தால் மீட்சி வலுப்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். இல்லையெனில் மீண்டும் பலவீனம் ஏற்படலாம். எனவே, தற்போதைய மீட்சி எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. இந்த மீட்சி தொடர்வதற்கு இன்னும் ஒரு சில டெக்னிக்கல் உறுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன.

22509 22265 22126

22875 22997 23137

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்

நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 26.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு

(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு

(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்

அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

எம்.ஏ.சி.டி., இன்னும் நெகட்டிவ்வாகவே இருந்தாலும் சிக்னல் லைனுக்கு மேலே இருப்பதும், பாசிட்டிவ் ஹிஸ்டோகிராம் 50.01 என்ற அளவில் இருப்பதும் சிறியதொரு மீட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆர்.ஓ.சி., (0.66) சிறிய மீட்சி வரக்கூடும் என்பதை காட்டுகின்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us