டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் நிற்க 22,879க்கு மேல் நிலைக்க வேண்டும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் நிற்க 22,879க்கு மேல் நிலைக்க வேண்டும்
UPDATED : அக் 23, 2026 02:22 AM
ADDED : அக் 22, 2026 10:32 PM

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
22,687.75 22,785.00 22,554.85 22,687.65
நிப்டி 123 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கி, அதிகபட்சமாக -256 என்ற அளவிற்கு இறங்கி பின்னர் சிறுசிறு மீட்சிகளை கண்டு நாளின் இறுதியில் 123 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.52 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 1.14 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும், 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 0.12 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.35 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,642 நிறுவனங்களின் பங்குகளில் 1,024 ஏற்றத்துடனும், 2,512 இறக்கத்துடனும், 106 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி மீண்டும் முக்கிய சராசரிகளுக்கு கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., -160.51 என்ற அளவில் சிக்னல் லைனுக்கு (-225.90) மேல் உள்ளது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ்(9) 65.39 என்ற அளவில் உள்ளது. டிரெண்டு பலவீனமாக இருந்தாலுமே நெகட்டிவ் மொமென்டம் சற்று குறைந்துள்ளதையே இது காட்டுகின்றது. அதேநேரம் ஆர்.எஸ்.ஐ., 43.98 என்ற அளவில் இருப்பது பியரிஷ் மொமென்டம் இன்னும் இருப்பதை உறுதி செய்கின்றது. ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் மற்றும் பாஸ்ட் ஸ்டொக்காஸ்ட்டிக் புதியதாக பலவீனம் உருவாகியிருப்பதை போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. ஆர்.ஓ.சி., 0.58 என்ற அளவில் இருந்தாலும் மீட்சி நடக்கும் என்பதை உறுதியாக காண்பிக்கவில்லை.
டெக்னிக்கல்கள் கலவையான சிக்னல்களை தருவதால் சந்தையின் போக்கு முழுமையாக பலவீனமாக இருப்பதாக கூற முடியாது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் நிப்டி 22,555க்கு கீழே சென்றால் 22,220-22,180 வரை செல்ல வாய்ப்புள்ளது. உடனடி ரெசிஸ்டென்ஸாக குறுகிய கால இ.எம்.ஏ., சராசரிகளான 22,798-22,879 என்ற லெவல்கள் இருக்கின்றது. இந்த ரெசிஸ்டென்ஸ் லெவல்களை கடந்து மேலே சென்று நிலைக்காத வரை நிப்டியின் பியரிஷ் தன்மை மாறிவிட்டது என்று கூற முடியாது.
22,567 22,446 22,358
22,797 22,906 22,994
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 22-10-26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
பார்தி ஏர்டெல் (எம்.ஏ.சி.டி.,: 9.53, ஆர்.ஓ.சி.,: 6.47 ஆர்.எஸ்.ஐ.,: 59.17) 1,895.00 1,873 1,850 1,919 2, 4, 5, 6
கேஸ்ட்ரால் இந்தியா (எம்.ஏ.சி.டி.,: 1.14, ஆர்.ஓ.சி.,: -1.07, ஆர்.எஸ்.ஐ.,: 55.75) 197.88 195 191 199 2, 4, 5
சி.இ.எஸ்.சி., (எம்.ஏ.சி.டி.,: -3.14, ஆர்.ஓ.சி.,: -2.82, ஆர்.எஸ்.ஐ.,: 34.25) 130.02 128 126 133 2, 5
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் (எம்.ஏ.சி.டி.,: 12.93, ஆர்.ஓ.சி.,: 2.99, ஆர்.எஸ்.ஐ.,: 58.45) 1,239.00 1,234 1,218 1,250 2, 5, 6
தேவ்யானி இன்டர்நேஷனல் ( எம்.ஏ.சி.டி.,: -4.36, ஆர்.ஓ.சி.,: -8.21, ஆர்.எஸ்.ஐ.,: 33.86) 118.25 116 109 123 1, 4, 5
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு ht tps://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
