சேமிப்பு கணக்கில் உள்ள கூடுதல் பணம் தானாக மியூச்சுவல் பண்டுக்கு போகும்!
சேமிப்பு கணக்கில் உள்ள கூடுதல் பணம் தானாக மியூச்சுவல் பண்டுக்கு போகும்!
ADDED : செப் 24, 2025 02:22 AM

புதுடில்லி:வங்கி சேமிப்பு கணக்கில் நம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை தானாகவே மியூச்சுவல் பண்டு முதலீடுக்கு மாறி வருமானம் பெற வசதியாக, 'ஜியோ பேமென்ட்ஸ்' வங்கி, 'சேவிங்ஸ் புரோ' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை, 'ஜியோ பைனான்ஸ்' செயலி வழியாக பயன்படுத்தலாம். சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கலாம்.
இந்த வரம்புக்கு மேல் உள்ள தொகை, தினமும் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை தானாகவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யப்படும். முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை உடனடியாக பெற முடியும். இதற்கு மேல் உள்ள தொகை, வழக்கமான மியூச்சுவல் பண்டு விதிகளின்படி திருப்பி வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்க, எந்தவித நுழைவு மற்றும் வெளியே றும் கட்டணங்களும் கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த முதலீடுகள் வாயிலாக சராசரியாக 6.50 சதவீதம் வரை வருமானம் கிடைத்துள்ளதாக ஜியோ பேமென்ட்ஸ் தெரிவித்து உள்ளது.
இத்திட்டத்தின் வருமானம், மியூச்சுவல் பண்டு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. சேமிப்பு கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பணத்தில், வருமானம் ஈட்ட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்க, எந்தவித நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணங்களும் கிடையாது