sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அவதூறு; திருமாவளவன் மீது போலீசில் ஹிந்து முன்னணி புகார்

/

சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அவதூறு; திருமாவளவன் மீது போலீசில் ஹிந்து முன்னணி புகார்

சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அவதூறு; திருமாவளவன் மீது போலீசில் ஹிந்து முன்னணி புகார்

சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அவதூறு; திருமாவளவன் மீது போலீசில் ஹிந்து முன்னணி புகார்

16


ADDED : பிப் 02, 2026 09:18 PM

Google News

16

ADDED : பிப் 02, 2026 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதுாறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது, அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி போலீசில், ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், 'எனக்கு எந்த மன்னர்கள் மீதும் மதிப்பு, மரியாதை கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில் தான் தமிழகம் குட்டிச்சுவர் ஆனது.

சமஸ்கிருதமயமானது, ஹிந்துத்துவமயமானது' என ஹிந்து கடவுள்களை பற்றியும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை பற்றியும் அவதுாறாக பேசியுள்ளார்.

தமிழ் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோரையும் இழிவுபடுத்தியுள்ளார். மேலும், மொழிரீதியாக, மாநிலங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் வகையில், தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தகட்டமாக ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us