sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

/

நான்கரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

நான்கரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

நான்கரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பு; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

1


UPDATED : பிப் 02, 2026 10:15 PM

ADDED : பிப் 02, 2026 09:34 PM

Google News

1

UPDATED : பிப் 02, 2026 10:15 PM ADDED : பிப் 02, 2026 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு மீது பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2021-22ம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் பணம் சம்பாதிக்க, அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம்.

உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று திமுக அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது திமுக அரசு.

வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us