ADDED : ஜூலை 12, 2026 02:04 AM

9,000
மேற்காசிய போரின்போது இந்திய கடற்படை, 18 சரக்கு கப்பல்களை தாக்குதலில் இருந்து மீட்டு, 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை பாதுகாத்ததாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
6,000
நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பிரதமரின் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களுக்கான திட்டத்தின்கீழ் மானியம் பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் 6,000 கோடி ரூபாய் மானியம் தரப்படுகிறது.
70,000
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால், நாட்டின் வேளாண் பொருளாதார மதிப்பு 70,000 கோடி ரூபாய் வரை உயரும் என, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
12.50
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, இந்தியா
மீது விதித்துள்ள 12.50 சதவீத கட்டணத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு
வலியுறுத்தியுள்ளது. பேச்சு நடத்தி இதில் தீர்வு காணவும் அழைப்பு
விடுத்துள்ளது.
600
ஆடை மற்றும் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மேற்கு வங்கத்தில் உள்ள தனது உற்பத்தி ஆலையை 600 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்கிறது. இதனால், கூடுதலாக 20 கோடி ஆடைகள் தயாரிக்கும் திறன் ஏற்படும் என கூறியுள்ளது.
