உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
நேற்றைய வர்த்தக முடிவில் ‘நிப்டி ஐ.டி.,’ குறியீடு ஒரு சதவீதத்துக்கு மேல் சரிந்து 30,919 என்ற நிலையில் நிறைவடைந்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த குறியீடு 4.50 சதவீதமும், நடப்பு நவம்பர் மாதத்தில் இதுவரை 6.50 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த குறியீடு 17.70 சதவீதம் வரை ஏற்றம் கண்டிருந்ததால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை பதிவு செய்யும் நோக்கில் தற்போது பங்குகளை விற்று வருவதாகவும், ஐ.டி., பங்குகளை விற்றுவிட்டு, தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் சாதன துறை பங்குகளில் முதலீட்டை மாற்றி வருகின்றனர் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
