'ஏற்ற - இறக்கங்களுடனே தங்கத்தின் விலை நீடிக்கும்'
'ஏற்ற - இறக்கங்களுடனே தங்கத்தின் விலை நீடிக்கும்'
ADDED : நவ 18, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ச ர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை இந்த வாரத்தில் அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருக்க வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கை, அந்நாட்டின் பெடரல் வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறித்து வெளியிடும் அறிவிப்புகள் போன்றவை, தங்கத்தின் ஏற்ற இறக்கங்களில் எதிரொலிக்கக்கூடும்.
இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதார புள்ளிவிபரங்கள், தங்கம் விலைக்கு தற்காலிக ஆதரவை வழங்க வாய்ப்புள்ளதாக ஜே.எம்., பைனான்சியல் நிறுவனத்தின் கமாடிட்டி மற்றும் கரன்சி ஆய்வு பிரிவின் துணை தலைவர் பிரணவ் மேர் தெரிவித்துள்ளார்.

