டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900 புள்ளிகள் வரை ஏற்றம் தொடரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900 புள்ளிகள் வரை ஏற்றம் தொடரலாம்
UPDATED : ஜன 13, 2026 02:03 AM
ADDED : ஜன 13, 2026 01:57 AM

ஆரம்பத்தில் இருந்தே இறங்க ஆரம்பித்து, 25,473- வரையிலான வீழ்ச்சியை சந்தித்த நிப்டி, 12.30 மணிக்கு மேல் இறக்கத்தில் இருந்து மீண்டு, ஏற ஆரம்பித்து, நாளின் இறுதியில் 106 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளி-ல் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.40 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.84 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.99 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

ஒரு பங்கின் விலை எந்த திசையில் நகரப் போகிறது என்பதைக் கணிக்க உதவும் 'ஸ்டொக்காஸ்டிக் ஆசிலேட்டர்'கள் 'ஓவர் சோல்டு' என்ற நிலையை அடைந்திருப்பதால், 25,900 வரை ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு உள்ளது. டெக்னிக்கலாக 25,690 என்ற லெவலை தாண்டி இறங்காத வரை, பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவே எனலாம்.

