தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/பங்கு சந்தை 2 சதவீதம் உயர்வு

பங்கு சந்தை 2 சதவீதம் உயர்வு

பங்கு சந்தை 2 சதவீதம் உயர்வு


UPDATED : நவ 26, 2026 12:00 AM

ADDED : நவ 25, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 12:00 AM ADDED : நவ 25, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்கு சந்தைகள், நேற்றைய வர்த்தகத்தில் மீட்சியை பதிவு செய்தன. அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வரவு, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது ஆகிய காரணங்களால் சந்தை குறியீடுகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை உயர்ந்தன.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்ந்து 83,938 புள்ளிகளில் நிலைகொண்டது. இதேபோல், நிப்டி 467 புள்ளிகள் ஏற்றம் கண்டு 25,819 புள்ளிகளில் முடிவடைந்தது.

காரணங்கள்



1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 0.70 சதவீதம் வலுவடைந்து 92.23 ஆக முடிவடைந்தது

2 சர்வதேச சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருவது

3 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது

4 ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் ஐ.டி.சி.,’ ஆகிய முன்னணி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us