ADDED : அக் 01, 2025 01:27 AM

நிப்டி
ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, இரண்டு முறை இறக்கத்தை சந்தித்து மீட்சி கண்டு, நாளின் இறுதியில் வந்த சரிவில் இருந்து முழுமையாக மீளாமுடியாமல், இறுதியில் 23 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. துறை சார்ந்த குறியீடுகளில் பி.எஸ்.யு., பேங்க், மெட்டல் மற்றும் ஆட்டோ குறியீடுகள் அதிக ஏற்றத்துடனும்; மீடியா, கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் மற்றும் ரியால்ட்டி குறியீடுகள் அதிக இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,118 பங்குகளில் 1,517 ஏற்றத்துடனும், 1,506 இறக்கத்துடனும், 95 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): -64.35, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):38.13 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -2.00 என இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 24,700 என்ற நிலையைத் தாண்டி நாளை வர்த்தகம் ஆரம்பித்தால் மட்டுமே ஏற்றம் நிலைக்க வாய்ப்புள்ளது. 24,645 என்ற அளவுக்கு மேலே செல்லாமல், வர்த்தகம் நடைபெற்று வந்தால் இறக்கம் இன்னும் ஓரிரு நாட்கள் தொடரவாய்ப்புள்ளது.
நிப்டி பேங்க்
நாள் முழுவதும் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்ற நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 174 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): -16.20, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 45.14 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): -0.32 என்ற அளவில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் தொடர்வதற்கு கட்டாயமாக 54,655 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகமாக வேண்டியிருக்கும். டெக்னிக்கல் சூழல்கள், இது போன்ற ஏற்றம் தொடர்வதற்கு சாதகமாக இல்லாத காரணத்தினால், செய்திகளைப் பொறுத்தே ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.