டெக்னிக்கல் அனாலிசிஸ்; ஏற்றம் தொடர 26,050-க்கு கீழே போகக்கூடாது
டெக்னிக்கல் அனாலிசிஸ்; ஏற்றம் தொடர 26,050-க்கு கீழே போகக்கூடாது
UPDATED : நவ 28, 2025 10:33 AM
ADDED : நவ 28, 2025 05:09 AM

நிப்டி
ஆரம்பம் முதலே ஏற்றத்துடன் பயணித்த நிப்டி, 1:00 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, 3:00 மணியளவில் இழந்த புள்ளிகளில் இருந்து மீட்சி கண்டு, நாளின் இறுதியில் 10 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 3 ஏற்றத்துடனும்; 10 இறக்கத்துடனும்; 3 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 0.16 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 0.57 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
இதில், 'நிப்டி மீடியா' குறியீடு, அதிகபட்சமாக 0.84 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு குறைந்தபட்சமாக 0.05 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,191 பங்குகளில் 1,485 ஏற்றத்துடனும்; 1,597 இறக்கத்துடனும்; 109 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது என்ற போதிலும், சமீபத்திய அனுபவங்களை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது, இறக்கம் வந்து, பின்னர் ஏறுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. அப்படி இறக்கம் வந்தால், 26,050-க்கு கீழே சென்று வர்த்தகமாகாதவரை, நிப்டி புல்லிஷாக இருக்கிறது என்றே கொள்ள வேண்டும்.
நிப்டி பேங்க்

