UPDATED : அக் 02, 2026 02:42 AM
ADDED : அக் 01, 2026 10:04 PM

01-10-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
கோட்டக் பேங்க் 418.35 1.35
டாடா ஸ்டீல் 178.00 -6.30
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 721.20 12.50
எட்டர்னல் 313.90 -6.10
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 212.50 -4.38
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 20.75 -0.20
சுஸ்லான் எனர்ஜி 38.91 -0.58
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.39 -1.05
அசோக் லேலண்டு 150.48 -3.71
என்.எம்.டி.சி., 74.64 -1.90
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 176.00 -2.23
ஐநாக்ஸ் விண்டு 68.75 -0.76
மணப்புரம் பைனான்ஸ் 308.90 -6.95
ஏஞ்சல் ஒன் 276.80 2.80
என்.பி.சி.சி., (இந்தியா) 77.40 -1.10
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 421.00 5.50
கஜாரியா செராமிக்ஸ் 1,230.00 -5.10
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் 107.25 3.00
லஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் 183.10 5.74
பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் 1,486.10 4.20
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 22,543.70 22,610.60 22,217.30 22,421.95
நேற்று 76 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் 403 புள்ளிகள் என்ற அளவுக்கு சரிந்த நிலையில், பின்னர் சற்று மீண்டு நாளின் இறுதியில் 198 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி 100' குறியீடு குறைந்த பட்சமாக 0.92 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 1.29 சதவீதமும் சரிந்து முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 2.17 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக 3.46 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,707 நிறுவனங்களின் பங்குகளில் 1,022 ஏற்றத்துடனும்; 2,572 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
டெக்னிக்கலாக நிப்டியில் பலவீனம் தொடரவே செய்கிறது. அதிக அளவில் ஓவர் சோல்டாக இருக்கும் ஆர்.எஸ்.ஐ., (22.57) மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் (15.04) அளவீடுகள் ஒரு சிறிய மீட்சி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகின்றன.
ஆனால், நிப்டி 14 மற்றும் 21 நாள் சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு டென்கன்-சென்னுக்கு (22,853) கீழே இருப்பதால் பலவீனமான நிலைமையே தென்படுகிறது எனலாம்.
தற்போதைக்கு 22,217 முக்கிய உடனடி சப்போர்ட்டாக உள்ளது. இதற்கு கீழே சென்றால் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது. 22,610 மற்றும் 22,853 போன்ற லெவல்கள் உடனடி ரெசிஸ்டென்ஸாக உள்ளன.
ஆதரவு 22,223 22,023 21,873
தடுப்பு 22,616 22,810 22,960
