தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கலாக மீட்சிக்கான வாய்ப்பு இருக்கிறது

டெக்னிக்கலாக மீட்சிக்கான வாய்ப்பு இருக்கிறது

டெக்னிக்கலாக மீட்சிக்கான வாய்ப்பு இருக்கிறது


UPDATED : அக் 06, 2026 06:56 AM

ADDED : அக் 05, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 06:56 AM ADDED : அக் 05, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி50 (எண்ணிக்கை)

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 704.80 -16.40

ஐ,டி.சி., 268.90 13.00

எட்டர்னல் 320.80 6.90

கோட்டக் மஹிந்திரா பேங்க் 416.00 -2.35

டாடா ஸ்டீல் 178.14 0.14

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 21.06 0.31

சுஸ்லான் எனர்ஜி 38.92 0.01

எப்.எஸ்.என்.இ.,காமர்ஸ் வெஞ்ச்சர்ஸ் 339.55 14.60

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 82.22 1.83

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 92.79 -0.37

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

பந்தன் பேங்க் 168.27 -7.73

டி.டி., பவர் சிஸ்டம்ஸ் 814.30 22.15

ரெடிங்டன் 411.45 13.50

ஹெச்.எப்.சி.எல்., 250.27 11.91

என்.பி.சி.சி., (இந்தியா) 76.20 -1.20

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பேங்க் ஆப் பரோடா 232.80 1.98

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 429.00 8.00

சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் சொல்யூஷன்ஸ் 882.30 3.30

இந்தியன் பேங்க் 810.00 16.85

ஷிப்பிங் கார்ப்போரேஷன் ஆப் இந்தியா 290.90 23.85

நிப்டி 110 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து, வர்த்தகத்துக்கு இடையே ஏறிய புள்ளிகள் அனைத்தையும் இழந்து, முடிவில் 133 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

பரந்த சந்தை குறியீடுகள் 17ல் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும் ஒரு குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 500' குறியீடு குறைந்த பட்சமாக 0.27 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 0.67 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும் 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி எப்.எம்.சி.ஜி.,' குறியீடு அதிக பட்சமாக 1.80 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிக பட்சமாக 1.11 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,706 நிறுவனங்களின் பங்குகளில் 1,745 ஏற்றத்துடனும் 1,844 இறக்கத்துடனும், 117 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் பொதுவான டெக்னிக்கல் டிரெண்டு இறக்கத்தை காட்டுகிறபோதும் ஓவர் சோல்டாக இருக்கும் இண்டிக்கேட்டர்கள், குறுகிய கால டெக்னிக்கல் மீட்சிக்கான வாய்ப்பு இருப்பதை காட்டுகின்றன. ஆனால், இதை டிரெண்டு மாற்றத்திற்கான அறிகுறியாகக் கருத முடியாது. 22,621க்கு மேலே நிலைத்து நின்றால் 22,809-22,853 என்ற லெவல்வரை மீட்சி தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 22,809-22,853 பகுதியை கடந்து மேலே செல்லாதவரை, நிப்டியின் பொதுவான டெக்னிக்கல் டிரெண்டு் பலவீனமாகவே இருக்கும் எனலாம். மறுபுறம், இறக்கம் ஏற்பட்டால் 22,397 உடனடி சப்போர்ட் லெவலாக இருக்கின்றது. இதனை உடைத்து கீழே சென்றால் 22,217 வரை செல்ல வாய்ப்புள்ளது.

ஆதரவு 22,425 22,300 22,215

தடுப்பு 22,650 22,750 22,835

05.10.2026 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 22,532.40 22,621.80 22,397.10 22,555.75

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us