UPDATED : அக் 06, 2026 06:55 AM
ADDED : அக் 05, 2026 11:14 PM
இ ந்திய பங்கு சந்தையில் 'ரீடெய்ல்' துறையை சேர்ந்த முன்னணி நிறுவனமான 'வி2 ரீடெய்ல்' பங்குகள், நேற்று ஒரே நாளில் 18 சதவீதம் வரை சரிந்து மிகப்பெரிய வர்த்தக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு இதுவாகும்.
கடந்த 2025- - 2026ம் நிதிஆண்டின் ஜுலை - செப்டம்பர் காலாண்டில் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகைகள் வந்ததால், நிறுவனத்தின் விற்பனை மிக அதிகமாக இருந்தது. ஆனால், நடப்பு 2026 - -2027ம் நிதி ஆண்டின் அக்டோபர் -- டிசம்பர் காலாண்டிற்கு இந்த பண்டிகைகள் தள்ளிப்போயுள்ளன. பண்டிகை காலம் தள்ளிப்போனதன் காரணமாக, ஜூலை -- செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் விற்பனை அளவுகள் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை விட குறைவாக பதிவாகியுள்ளது.
