ADDED : அக் 02, 2025 11:35 PM

ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கான கட்டணங்களை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றங்கள் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கைரேகை அப்டேட் செய்வதற்கான கட்டணம், 100லிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கான கட்டாய கைரேகை அப்டேட்டுகளுக்கு, கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண நடைமுறை
1. சொந்த விபரங்கள் அப்டேட்
பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் போன் எண் அல்லது மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை தனியாக அப்டேட் செய்ய
புதிய கட்டணம்: ரூ.75
இதற்கு முன்: ரூ.50
பயோமெட்ரிக் அப்டேட்டுடன் சேர்த்து செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது.
2. பயோமெட்ரிக் அப்டேட்
கைரேகை, கருவிழி மற்றும் புகைப்பட விபரங்களைப் புதுப்பிக்க
தற்போதைய கட்டணம்: ரூ.125
அக்டோபர் 2028 முதல்: ரூ.150 ஆக உயரும்.
3. ஆவணங்கள் அப்டேட்
அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை சமர்ப்பிக்க
மை ஆதார் போர்ட்டல் வாயிலாக செய்தால்: 2026 ஜூன் 14 வரை இலவசம்
ஆதார் மையங்களில் செய்தால்: ரூ.75 (முன்பு: ரூ.50).
4. ஆதார் பிரின்ட் அவுட் கட்டணம்
மின்னணு கே.ஒய்.சி., அல்லது பிற வழிகளின் வாயிலாக, ஆதார் பிரின்ட் அவுட் எடுப்பதற்கு, 40 ரூபாய் வசூலிக்கப்படும்.
குழந்தைகளுக்கு கட்டண விலக்கு
5 முதல் 17 வயது வரை: முதல் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் இலவசம்
7 முதல் 15 வயது வரை இந்த அப்டேட்டுக்கு, 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், அடுத்தாண்டு செப்டம்பர் 30 வரை இலவசமாக வழங்கப்படும்.
ஆதார் மையங்களுக்கு வர முடியாதவர்களுக்காக, நேரடியாக வீட்டுக்கே வந்து சேவை வழங்க
ஒரு வீட்டுக்கான வருகை கட்டணம்: ரூ.700 - ஜி.எஸ்.டி., உட்பட.
அதே முகவரியில் உள்ள கூடுதல் நபர்கள்
முதல் விண்ணப்பதாரர், 700 ரூபாய் செலுத்த வேண்டும். அடுத்தடுத்த விண்ணப்பதாரர்களுக்கு, 350 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.