பி.எப்., கணக்கில் யு.ஏ.என்., செயல்படுத்த 'உமாங்' செயலி கட்டாயம்
பி.எப்., கணக்கில் யு.ஏ.என்., செயல்படுத்த 'உமாங்' செயலி கட்டாயம்
ADDED : ஜூலை 07, 2026 07:19 AM

பி.எப்., சந்தாதாரர்கள் இனி, யு.ஏ.என்., எண்ணை முதன்முறையாக செயல்படுத்தவோ அல்லது புதிதாக பெறவோ இ.பி.எப்.ஓ., இணையதளத்தை பயன்படுத்த முடியாது. இந்த இரண்டு சேவைகளும் 'உமாங்' செயலி வழியாக மட்டுமே வழங்கப்படும் என்றும், அதற்கு ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் கட்டாயம் என்றும் இ.பி.எப்.ஓ., அறிவித்துள்ளது.
யு.ஏ.என்., செயல்படுத்துவது எப்படி? உமாங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இ.பி.எப்.ஓ., சேவைகள் பகுதிக்கு செல்ல வேண்டும் 'முக அங்கீகாரம் வழி யு.ஏ.என்., சேவைகள்' பிரிவில், 'யு.ஏ.என்., செயல்படுத்துதல்' என்பதை தேர்வு செய்ய வேண்டும் ஆதா ர் முக அங்கீகாரத்தை நிறைவு செய்து, திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதிய யு.ஏ.என்., பெறுவது எப்படி? இ.பி.எப்.ஓ., சேவைகள் பகுதியில், 'யு.ஏ.என்., ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துதல்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்
ஆதார் முக அங்கீகாரத்தை நிறைவு செய்த பின், புதிய யு.ஏ.என்., எண் ஒதுக்கப்படும்.
ஏற்கனவே யு.ஏ.என்., இருந்தால்? ஏற்கனவே யு.ஏ.என்., எண்ணை வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்கு இந்த மாற்றத்தால் எந்த பாதிப்பும் இல்லை
இந்த மாற்றம், யு.ஏ.என்., செயல்படுத்துதல் மற்றும் புதிய யு.ஏ.என்., ஒதுக்குதல் சேவைகளுக்கு மட்டுமே
பிற உறுப்பினர் சேவைகள் தொடர்ந்து இ.பி.எப்.ஓ., இணையதளத்தில் கிடைக்கும்.
ஏன் இந்த மாற்றம்? இணைய சேவைகளின் வேகம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த
அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தி, தவறான பயன்பாட்டை தடுக்க.
இ.பி.எப்.ஓ., அறிவுறுத்தல் மேம்படுத்தப்பட்ட அமைப்பு தற்போது செயல்பாட்டில் இருந்தாலும், கூடுதல் சரிபார்ப்பு நடைமுறைகள் காரணமாக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு கோரிக்கைகள் பரிசீலிக்க வழக்கத்தைவிட சற்று கூடுதல் நேரம் ஆகலாம் ஒரே கோரிக்கையை மீண் டும் மீண்டும் சமர்ப்பிக்கவோ அல்லது பலமுறை உள்நுழையவோ வேண்டாம் என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
