தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வளர்ச்சி பாதையில் 'வீனஸ் பைப்ஸ்' ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் பரிந்துரை

 வளர்ச்சி பாதையில் 'வீனஸ் பைப்ஸ்' ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் பரிந்துரை

 வளர்ச்சி பாதையில் 'வீனஸ் பைப்ஸ்' ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் பரிந்துரை


ADDED : ஜூலை 12, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேட்டா சென்டர், செமிகண்டக்டர் போன்ற வேகமாக வளரும் துறைகளில் நுழைந்து, உற்பத்தி திறனை பல மடங்கு உயர்த்தியிருப்பதால் 'வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ்' நிறுவன பங்குகளை வாங்கலாம் என 'ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்' பரிந்துரைத்துள்ளது.

இந்நிறுவன பங்கு தற்போதைய விலையில் இருந்து 12 மாதங்களில் 2,350 ரூபாய் வரை கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வீனஸ் பைப்ஸ் பங்குகள் குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்தி திறன் 4.4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, உயர்ந்த லாபம் தரும் தடையற்ற குழாய்கள் பிரிவில் நிறுவனத்தின் சந்தை பங்கு கடந்த 2020ம் ஆண்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், 2026ம் ஆண்டில் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

டேட்டா சென்டர்களுக்கான குளிரூட்டும் அமைப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உபகரணங்களை வழங்க 185 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கிடைத்துள்ளது. இதற்காக 70 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் டேட்டா சென்டர் திறன் 2030ம் ஆண்டுக்குள் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நிறுவனத்திற்கு நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் அதிகரிப்பதால் நிறுவனத்தின் எபிட்டா லாப விகிதம் 2026ல் 16.30 சதவீதமாக இருந்த நிலையில், வரும் 2028ம் ஆண்டில் 18 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் 2026-28ம் காலக்கட்டத்தில் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதமும், நிகர லாபம் 31 சதவீதமும் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

கடன்-பங்கு விகிதம் 0.40 மடங்காக கட்டுக்குள் இருப்பதும், முதலீட்டின் மீதான வருவாய் மேம்படும் என்பதும் நிறுவனத்தின் பலமாக இருக்கிறது.

அதேநேரம், வாடிக்கையாளர்களின் முதலீட்டு செலவுகள் குறைவது, ஸ்டீல் மூலப்பொருள் விலை ஏற்ற இறக்கம் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் புவிசார் பதற்றம் ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய முக்கிய அபாயங்களாக உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us