ADDED : ஜூலை 12, 2026 01:30 AM

வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்குவதையொட்டி, 'போன்பே' மற்றும் 'ஜியோ பைனான்ஸ்' செயலிகள் 'டாக்ஸ்பட்டி' நிறுவனத்துடன் இணைந்து தங்களது தளங்களிலேயே நேரடியாக, குறைந்த கட்டணத்தில் வரி தாக்கல் செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இச்சேவையை போன்பே அல்லது ஜியோ பைனான்ஸ் செயலிகளில் 'டாக்ஸ் பைலிங்' பிரிவின் வாயிலாக மிக் குறைந்த நிமிடங்களில் வரி தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் திட்டம் (ரூ.24) ஒரே நிறுவனத்தில் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் எளிய முறையில் 'ஐ.டி.ஆர்.,-1'தாக்கல் செய்வோருக்கு இது பொருந்தும்.
பிரீமியம் திட்டம் (ரூ.999 முதல்)
சம்பளத்துடன் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு, எப் அண்டு ஓ அல்லது சொந்த தொழில் வாயிலாக வருமானம் ஈட்டுபவர்களுக்கானது. இதில் 'டாக்ஸ்பட்டி' நிறுவனத்தின் வரி நிபுணர்கள் நேரடியாக வழிகாட்டுவர்.
