வோடபோன் சந்தை மதிப்பு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியானது
வோடபோன் சந்தை மதிப்பு மீண்டும் ரூ.1 லட்சம் கோடியானது
ADDED : அக் 24, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயை எட்டிஉள்ளது. நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 9.65 ரூபாய் என்ற 10 மாத உச்சத்தை எட்டியது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும், வோடபோன் ஐடியாவின் பங்கு விலை 10 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. நேற்று மும்பை பங்கு சந்தையில், வர்த்தக நேரத்தின் முடிவில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.04 லட்சம் கோடி ரூபாயாகவும்; பங்கு விலை 1.05 சதவீதம் அதிகரித்து 9.62 ரூபாயாகவும் இருந்தது.

