ADDED : செப் 23, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ங்கு முதலீட்டு நிதி நிறுவனமான, 'பெர்க் ஷயர் ஹாத்வே' சீன மின்சார வாகன நிறுவனமான பி.ஒய்.டி.,யில் வைத்திருந்த தனது மொத்த பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக வைத்திருந்த இந்த பங்குகளை விற்றதன் வாயிலாக, பெர்க் ஷயர் நிறுவனத்துக்கு 4,500 சதவீத லாபம் கிடைத்தது. பி.ஒய்.டி., நிறுவனத்தின் 22.50 கோடி பங்குகளை, வாரன் பபெட் நிறுவனம் 23 கோடி டாலருக்கு அதாவது 2,024 கோடி ரூபாய்க்கு கடந்த 2008ல் வாங்கியது. தற்போது, இமாலய லாபத்தில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளது.
பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனம் வசமிருந்த பங்குகள் விற்பனைக்குப் பின், பி.ஒய்.டி., நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 4 சதவீத சரிவு கண்டது.