பலவீனம் தொடரலாம்; சிறிய மீட்சிக்கும் வாய்ப்பு உள்ளது
பலவீனம் தொடரலாம்; சிறிய மீட்சிக்கும் வாய்ப்பு உள்ளது
UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 09:54 PM

12-10-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
டாடா ஸ்டீல் 172.24 –1.56
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 704.90 –2.35
கோட்டக் பேங்க் 443.40 2.40
ஐ.டி.சி., 257.90 –8.10
என்.டி.பி.சி., 310.00 –2.00
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
சுஸ்லான் எனர்ஜி 39.57 1.97
எஸ் பேங்க் 20.44 –0.06
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 89.50 –2.81
என்.எம்.டி.சி., 70.34 –1.46
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 79.44 –0.08
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பூனாவாலா பின்கார்ப் 446.00 –1.30
ஐநாக்ஸ் விண்டு 67.17 0.52
டெல்ஹி வரி 412.15 11.65
டாடா கெமிக்கல்ஸ் 633.55 43.80
ஏஞ்சல் ஒன் 302.25 10.25
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
சி.இ.எஸ்.சி., 136.51 3.28
குட்லக் இந்தியா 573.00 72.75
ஹவுசிங் அண்டு அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் 163.85 4.10
கர்நாடகா பேங்க் 338.90 10.70
பிரின்ஸ் பைப்ஸ் அண்டு பிட்டிங்ஸ் 266.00 17.05
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 22,593.20 22,651.10 22,304.45 22,363.35
நேற்று 72 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி சற்று நேரத்தில் இறங்கத் தொடங்கியது. பின்னர், நாளின் இறுதியில் 157 புள்ளிகள் சரிந்து முடிந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில், 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவீத ஏற்றத்துடனும்; ‘நிப்டி 100’ குறியீடு அதிகபட்சமாக 0.52 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், ‘நிப்டி மீடியா’ குறியீடு அதிகபட்சமாக 4.60 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 1.67 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,706 நிறுவனங்களின் பங்குகளில் 1,795 ஏற்றத்துடனும்; 1,796 இறக்கத்துடனும்; 115 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி முக்கிய நகரும் சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு கிளவுடுக்கு கீழே முடிவடைந்துள்ளது. இது, நிப்டியின் போக்கு இன்னும் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது.
ஆர்.எஸ்.ஐ., 34.04, எம்.ஏ.சி.டி., –345.73, ரேட் ஆப் சேஞ்ச் –4.62 மற்றும் ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் 32.20 என்ற அளவில் இருக்கின்றன. ஆர்.எஸ்.ஐ., ஓவர் சோல்டு நிலையை நோக்கி நகர்கிறது என்றாலும், இன்னும் அந்த நிலையை அடையவில்லை.
எம்.ஏ.சி.டி., பியரிஷ் மொமென்டம் இன்னும் இருப்பதையே காட்டுகிறது. ஒட்டுமொத்த டெக்னிக்கல் சூழலும், நிப்டியில் வலுவான ஏற்றத்திற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்பதை காட்டுகின்றன.
இருப்பினும், சிறிய மீட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பையும் முற்றிலும் தவிர்க்க முடியாது. மொத்தத்தில் நிப்டியில் இறக்கம் தொடரவோ அல்லது சிறியதொரு மீட்சி வந்து போகவோ வாய்ப்புள்ளது. 22,500-க்கு கீழே நிலைத்திருக்கும் வரை இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. நிப்டி 22,304-க்கு கீழே சென்றால் பலவீனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 22,651-க்கு மேலே சென்று நிலைத்திருந்தால், ஏற்றத்திற்கான சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
ஆதரவு 22,230 22,095 21,960
தடுப்பு 22,575 22,785 22,920
