தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/துளிகள்

துளிகள்

துளிகள்


UPDATED : அக் 13, 2026 12:00 AM

ADDED : அக் 12, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:00 AM ADDED : அக் 12, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

50% லாபம் தந்த

‘அய் பைனான்ஸ்’

நே ற்றைய வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவிய போதிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனமான ‘அய் பைனான்ஸ்’ பங்குகள் வர்த்தகத்தின் இடையே கிட்டத்தட்ட 4 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் 2வது காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளியானதே இந்த ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

52 வார உச்சத்தை

நெருங்கும் ‘மீஷோ’

இ – காமர்ஸ் நிறுவனமான ‘மீஷோ’ பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதம் வரை உயர்ந்து, தனது 52 வார அதிகபட்ச விலையை நெருங்கியுள்ளது. நேற்று 240 ரூபாய் என்கிற விலையில் தொடங்கி, வர்த்தகத்துக்கு இடையே 245.50 ரூபாய் வரை உயர்ந்தது. இது, நிறுவனத்தின் 52 வார அதிகபட்ச விலையான 254.40 ரூபாய்க்கு மிக அருகில் உள்ள விலையாகும். நிறுவனம் நடத்திய ‘மெகா பிளாக்பஸ்டர் சேல் – 2026’ பண்டிகை கால விற்பனையில் பதிவான அபாரமான வணிக தரவுகளே இந்த பங்கு விலையேற்றத்திற்கு காரணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us