தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிப்டி 23,000க்கு மேல் நிலைத்தால் பலவீனம் குறையும்

 நிப்டி 23,000க்கு மேல் நிலைத்தால் பலவீனம் குறையும்

 நிப்டி 23,000க்கு மேல் நிலைத்தால் பலவீனம் குறையும்


ADDED : செப் 30, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 47 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து 210 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. பிறகு மீட்சியடைந்த நிலையில், நாளின் இறுதியில் 64 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் ஒரேயொரு குறியீடு மட்டும் ஏற்றத்துடனும்; மீதமுள்ள 16 குறியீடுகளும் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 1.03 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 1.04 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 0.78 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபில்ஸ்' குறியீடு அதிக பட்சமாக 2.71 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,679 நிறுவனங்களின் பங்குகளில் 1,529 ஏற்றத்துடனும்; 2,038 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் முக்கிய சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு கிளவுடுக்கு கீழே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., (26.71) மற்றும் ஸ்டோகாஸ்ட்டிக் நிலவரமானது ஓவர் சோல்டு என்ற நிலைமையையே காட்டுகிறது.

எனவே, ஒரு டெக்னிக்கல் ரெக்கவரி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 23,029-23,241 லெவல்கள் உடனடி ரெசிஸ்டென்ஸாக உள்ளன.

இந்த ரெசிஸ்டென்ஸ் பகுதியை கடந்து மேலே சென்றால் 23,387-23,474 என்ற லெவல்கள் வரை பயணிக்க வாய்ப்புள்ளது. 22,569 உடனடி சப்போர்ட்டாக உள்ளது.

இதனை தாண்டி கீழே செல்லும் பட்சத்தில் 22,182 வரை செல்ல வாய்ப்புள்ளது. என்னதான் ஓவர் சோல்டு நிலமையில் டெக்னிக்கல் ரெக்கவரிக்கு தயாராக இருந்தாலும், நிப்டியின் பொதுவான நிலைமை பலவீனமாகவே உள்ளது. 23,000-த்திற்கு மேலே சென்று நிலைத்திருக்கும் வரை, இந்த நிலைமை மாறிவிட்டதாக கூற முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us