sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 அடுத்து வரும் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்?

/

 அடுத்து வரும் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்?

 அடுத்து வரும் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்?

 அடுத்து வரும் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்?


UPDATED : டிச 12, 2025 01:44 AM

ADDED : டிச 12, 2025 01:39 AM

Google News

UPDATED : டிச 12, 2025 01:44 AM ADDED : டிச 12, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடப்பாண்டில் பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் தங்கம் அதிக லாபத்தை கொடுத்தது. 2025ல் தங்கம் விலை 67.7 சதவீதம் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டில் தங்கம் விலை உயர சாதகமாக இருந்த காரணிகள், அடுத்த ஆண்டிலும் தொடர்வதால், தங்கம் வலுவான நிலையிலேயே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், குறைந்த வருமானம் மற்றும் அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும் எனவும் கூறுகின்றனர்.

எனவே, புதிய முதலீட்டாளர்கள், தங்கம் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் எஸ்.ஐ.பி., முறையில் 10-15 சதவீதம் வரை முதலீட்டை தொடங்கலாம் என ஆலோசனை கூறுகின்றனர். தங்கத்தில் அதிக லாபம் ஈட்டியவர்கள், தங்கள் அசலை, முதலீட்டு ஒதுக்கீட்டுக்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.

2025

தங்கம் விலை உயர காரணம்


* இந்தியா, சீனா, ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கியது

* சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் கொள்கைகளில் நிச்சயமற்ற தன்மை

* அமெரிக்காவில் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார புள்ளி விபரங்கள்

* ரூபாய் மதிப்பு சரிவு, திருமணம் உள்ளிட்ட பண்டிகைக்கால தேவை அதிகரிப்பு

2026

ஏற்றத்துக்கான அச்சுறுத்தல்கள்


* சர்வதேச அரசியல் பதற்றங்கள் குறைவது

* மத்திய வங்கிகள் கொள்முதலை குறைப்பது

* பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதங்களை உயர்த்துவது

* அமெரிக்க டாலர் வலுவடைவது






      Dinamalar
      Follow us