ADDED : மே 10, 2026 01:07 AM

மா றி வரும் வாழ்க்கை முறை, மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப, பெண்கள் காப்பீட்டு திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவது பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவருகிறது.
டெர்ம் காப்பீடு வாங்கும் பெண்களில் 70 சதவீதத்தினர் 35 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். மருத்துவ காப்பீடு வாங்கும் தம்பதியினரில் 60 சதவீதத்தினர் மகப்பேறு சிகிச்சைகளுக்கான 'கவரேஜ்' சேர்த்து வாங்குகின்றனர்.
2024- -- 25 நிதியாண்டுடன் ஒப்பிட்டால், 2025-- 26ம் நிதியாண்டில், பெண்களின் மருத்துவ காப்பீட்டு கிளைம்கள் 37 சதவீதம் உயர்ந்துள்ளன.
பெண் பாலிசிதாரர்களில் 56 சதவீதத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் உள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கவரேஜ் கொண்டவர்கள் 25 சதவீதம் உள்ளனர்.
இன்றைய பெண்கள் சேமிப்பு என்பதையும் தாண்டி தங்கள் உடல் மற்றும் மன நலனை பாதுகாக்க காப்பீடு அவசியம் என்று கருதுகின்றனர். குடும்ப தலைவியானாலும், சுய ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கருதுவதாக இந்த தரவுகள் வாயிலாக தெரிய வருகிறது.
