ADDED : டிச 09, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலீட்டு தளமான 'குரோ' வாயிலாக, முதலீட்டாளர்கள் இனி கடன் பத்திரங்களை வாங்கி விற்க முடியும். இந்நிறுவனம், இதற்கான உரிமத்தை செபியிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரோ தன் செயலி வாயிலாகவே கார்ப்பரேட் பத்திரங்களை பட்டியலிட, வினியோகிக்க மற்றும் பரிவர்த்தனை செய்ய இந்த உரிமம் உதவும் .
எனவே, சிறு முதலீட்டாளர்கள், குரோ தளம் வழியாக கார்ப்பரேட் பத்திரங்களை எளிதாகவும் வெளிப்படையாகவும் வாங்கவும், விற்கவும் முடியும்.
என்.எஸ்.இ., தரவுகளின்படி, குரோ பங்கு தரகு நிறுவனங்களில், 26.62 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.20 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

