வெள்ளியை அடகு வைத்து பணம் பெறலாம்! வழிகாட்டுதல் வெளியிட்டது ஆர்.பி.ஐ.,
வெள்ளியை அடகு வைத்து பணம் பெறலாம்! வழிகாட்டுதல் வெளியிட்டது ஆர்.பி.ஐ.,
ADDED : அக் 28, 2025 12:06 AM

நகைக் கடன் என்றாலே, தங்கம் தான் நினைவுக்கு வரும். இனி, வெள்ளியையும் அடகு வைத்து பணம் பெறலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பால், வெள்ளை தங்கமாக மதிப்பு பெறுகிறது, வெள்ளி. வெள்ளி நகைகளுக்கும் கடன் அளிக்கும் திட்டத்துக்கான புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை 2026, ஏப்., 1 முதல், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா வெள்ளி பொருட்களுக்கும் கடன் கிடைக்குமா?
வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் மீது மட்டுமே கடன் பெற முடியும்
பார் வெள்ளி, இ.டி.எப்., மியூச்சுவல் பண்டுகள் போன்ற நிதி சொத்துகள் மீது கடன் பெற முடியாது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில், அதிகபட்சமாக 85 சதவீதம், 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்
ஐந்து லட்சம் ரூபாய் வரை தேவைப் பட்டால், அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில் 80% கடன் கிடைக்கும்
ஐந்து லட்சத்திற்கு மேல் நிதி தேவைப்பட்டால், அடகு வைக்கப்படும் வெள்ளியின் மதிப்பில் 75% கடன் கிடைக்கும்
வெள்ளி விலையில் ஏற்றத்தாழ்வு இருப்பதால், கடனை திரும்ப செலுத்தும் வரை இதை பராமரிக்க உத்தரவு.
எவ்வளவு வெள்ளி அடகு வைக்கலாம்?
ஒரு நபர் 10 கிலோ வரை வெள்ளி நகைகளை அடகு வைக்கலாம்
அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க அனுமதி.

