'உங்கள் பணம் உங்கள் உரிமை' உரிமை கோராத தொகைக்கான பிரசாரம்
'உங்கள் பணம் உங்கள் உரிமை' உரிமை கோராத தொகைக்கான பிரசாரம்
UPDATED : அக் 04, 2025 11:38 PM
ADDED : அக் 04, 2025 11:10 PM

உ ரிமை கேட்கப்படாத, நிதிச் சொத்துக்களை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கி வைத்தார். டிசம்பர் வரை மூன்று மாதங்கள் இந்த பிரசாரம் நடைபெறவுள்ளது.
![]() |
![]() |
உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற பெயரிலான, இந்த பிரசாரத்தில் ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ., மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பி.எப்.ஆர்.டி.ஏ., வங்கிகள் ஆகியவை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
பல்வேறு அமைப்புகளிடம், கேட்பாரற்ற 1.84 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது
கடந்த ஆக., 31, 2025 நிலவரப்படி, இதில் 75,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது
உரிமை கேட்கப்படாத 172 லட்சம் பங்குகள், முதலீட்டாளர் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்பட்டன
கடந்த ஒரு மாதத்தில் 450 கோடி ரூபாய், உரிமைதாரர்களுக்கு வழங்கப்பட்டது