அமெரிக்க பங்குகளில் வர்த்தகம் ஜீரோதா விரைவில் அனுமதி
அமெரிக்க பங்குகளில் வர்த்தகம் ஜீரோதா விரைவில் அனுமதி
ADDED : அக் 28, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ மெரிக்க பங்குகளில் தங்கள் முதலீட்டாளர்களை வர்த்தகம் செய்ய விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக, தரகு நிறுவனமான ஜீரோதாவின் நிறுவனர் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிப்ட் சிட்டியை தளமாகக் கொண்டு இந்த வர்த்தகம் செயல்படுத்தப்படும் என்றும், தங்கள் தளத்தில் இந்த சேவையை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் செயல்படுத்துவோம் எனவும், அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக ஜீரோதா முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், முதற்கட்டமாக, அமெரிக்க பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

