/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
100 ஆண்டுகளுக்கு பின் வரும் மாற்றம் புதிய 'பாய்லர்' சட்ட மசோதா தாக்கல்
/
100 ஆண்டுகளுக்கு பின் வரும் மாற்றம் புதிய 'பாய்லர்' சட்ட மசோதா தாக்கல்
100 ஆண்டுகளுக்கு பின் வரும் மாற்றம் புதிய 'பாய்லர்' சட்ட மசோதா தாக்கல்
100 ஆண்டுகளுக்கு பின் வரும் மாற்றம் புதிய 'பாய்லர்' சட்ட மசோதா தாக்கல்
ADDED : ஆக 10, 2024 12:39 AM

புதுடில்லி:எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், புதிய 'பாய்லர்' மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நுாற்றாண்டு பழமையான சட்டத்தை மாற்றவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் வகை செய்யும் விதத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், பாய்லர் எனப்படும் கொதிகலன்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 1923ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாய்லர் சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு, கடந்த இரண்டாம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, புதிதாக அறிமுகம் செய்துள்ள மசோதாவில், தொழிற்துறை உள்ளிட்ட பங்குதாரர்களின் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பாய்லர் மற்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வணிகத்தை எளிதாக்கும் வகையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் உட்பட பாய்லர் தொழில்துறையினருக்கு பயனளிக்கும் வகையில், குற்றவியல் தடுப்பு விதிமுறைகளும் இம்மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய பாய்லர் வாரியத்தின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில், அதுகுறித்து விரிவாக இதில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
100 ஆண்டு பழமையான சட்டத்துக்கு விடை
1923ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது
புதிய சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சி
குற்றவியல் தடுப்பு விதிமுறைகளும் இடம்பெறுகிறது

