/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ஏஞ்சல் வரி' முற்றிலும் நீக்கம்
/
'ஏஞ்சல் வரி' முற்றிலும் நீக்கம்
ADDED : ஜூலை 23, 2024 11:51 PM

'ஸ்டார்ட் அப்' எனும் புத்தொழில் நிறுவனங்கள், 'ஏஞ்சல்' முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நிதிக்கு வசூலிக்கப்பட்டு வந்த 'ஏஞ்சல் வரி' முறையை, முற்றிலும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கும்போது, அதன் உரிமை பங்குகளை பெற்றுக்கொண்டு, முதலீடுகளை மேற்கொள்பவர்களை, ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என அழைப்பர்.
உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து இப்படி திரட்டும் நிதிக்கு மட்டும் வசூலிக்கப்பட்டு வந்த ஏஞ்சல் வரி, கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நிதிக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஏஞ்சல் வரி விதிப்பு ஒரு நியாயமற்ற நடைமுறை என, ஸ்டார்ட் அப்கள் சமீபகாலமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கின.
பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக் கேட்பின் போது, மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையினரும் இந்த வரிவிதிப்பு முறையை அகற்ற பரிந்துரைத்தனர்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த வரி விதிப்பு முறையை முற்றிலும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஸ்டார்ப் அப் நிறுவனங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.