/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.900 கோடியில் தொழில் துவங்க 6 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
/
ரூ.900 கோடியில் தொழில் துவங்க 6 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ரூ.900 கோடியில் தொழில் துவங்க 6 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ரூ.900 கோடியில் தொழில் துவங்க 6 அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
ADDED : ஆக 31, 2024 12:21 AM

சென்னை:அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழத்தில் 900 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய, 'மைக்ரோசிப், நோக்கியா, பேபால்' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டன. இதனால், 4.100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சான் பிரான்சிஸ்கோவில், மைக்ரோசிப், நோக்கியா உள்ளிட்ட ஆறு தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள், முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின. இந்நிகழ்வில், அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு கலந்து கொண்டனர்.
அதன் விபரம்:
'நோக்கியா'
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் நோக்கியா நிறுவனம், அதன் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மைய விரிவாக்கத்துக்கு 450 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சிறுசேரி சிப்காட்டில் அமைய உள்ள இந்த மையத்தில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
'பேபால் ஹோல்டிங்ஸ்'
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேபால் ஹோல்டிங்ஸ், ஏற்கனவே சென்னையில் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
'ஈஸ்ட் இன்ஜி., சிஸ்டம்ஸ்'
செமிகண்டக்டர் சூழல் அமைப்புக்கான தொழில்நுட்ப தீர்வு நிறுவனமான இது, கோவையில் பொறியியல் மையம் அமைத்து செயல்படுகிறது. இப்போது, 150 கோடி ரூபாய் முதலீட்டில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சூலுாரில், செமிகண்டக்டர் உபகரண வசதியை அமைக்க உள்ளது.
'மைக்ரோசிப் டெக்னாலஜி'
செமிகண்டக்டர் வினியோக முன்னணி நிறுவனமான இது, சென்னையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
மேலும், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க உள்ளது.
'இன்பிங்ஸ் ஹெல்த்கேர்'
சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான இன்பிங்ஸ், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வினியோக மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
'அப்ளைடு மெட்டீரியல்ஸ்'
அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ், சென்னை தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு, முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, தமிழகம் காத்திருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக விளங்கும் தமிழகத்தில், எண்ணற்ற அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளன. இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது''
-மு.க. ஸ்டாலின்,
தமிழக முதல்வர்
தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை திரட்ட அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சான் பிரான்சிஸ்கோவில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.