/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செபியின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் என்.எஸ்.இ.,
/
செபியின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் என்.எஸ்.இ.,
ADDED : ஏப் 05, 2024 10:56 PM

மும்பை:புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, செபியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக, தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சாஹன் தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச்சந்தை, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியிடம், இதற்காக 2016 டிசம்பரில் விண்ணப்பித்தது.
கடந்த 2009ல், என்.எஸ்.இ., துவக்கிய தரவு மையம் வாயிலாக, சில இடைத்தரகர்கள் முன்கூட்டியே தரவுகளை அணுகி, பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக, 2015ம் ஆண்டில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, செபி, தேசிய பங்குச் சந்தை மற்றும் அதன் மூத்த அதிகாரிகள் மீது விசாரணையை துவக்கியது. இந்த பிரச்னைகள் காரணமாக, தேசிய பங்குச் சந்தையின் புதிய பங்கு வெளியீடு தாமதமானது.
நாட்டின் மற்றொரு பங்குச் சந்தையான பி.எஸ்.இ., கடந்த 2017ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அப்போது மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், இதே ஆஷிஷ்குமார் சாஹன் என்பது குறிப்பிடத்தக்கது.

