/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
/
வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : ஏப் 28, 2024 12:25 AM

புதுடில்லி:ஆறு அண்டை நாடுகளுக்கு, 99.50 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளதாக, மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் 8ம் தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது. முந்தைய ஆண்டை விட, 2023 - 24ம் ஆண்டில், காரீப் மற்றும் ராபி பருவ பயிர்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையேற்றத்தை தடுக்கவும், மறு அறிவிப்பு வரும் வரும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க, அந்நாடுகளுக்கு 99.50 ஆயிரம் டன் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பயிரிடப்பட்ட 2,000 டன் வெள்ளை வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

