/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தொடர் சரிவில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி
/
தொடர் சரிவில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி
ADDED : ஆக 01, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சீனாவின் தொழிற்துறை உற்பத்தி செயல்பாடுகள், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜூலையிலும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூனில், 49.50 புள்ளிகளாக இருந்த தொழிற்துறை உற்பத்தி பி.எம்.ஐ., குறியீடு, ஜூலையில் 49.40 ஆக சரிந்துள்ளது-.
சீனாவின் சில்லரை விற்பனை வளர்ச்சி, கடந்த 18 மாதங்களில் இல்லாத வகையிலும், புதிய வீடுகளின் விலைகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத வகையிலும் சரிவடைந்துள்ளன.
ஜூனில் ஏற்றுமதி, 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்தபோதும், இறக்குமதி குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.