/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பசுமை நிதியத்தில் நிதி பெற ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்
/
பசுமை நிதியத்தில் நிதி பெற ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்
பசுமை நிதியத்தில் நிதி பெற ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்
பசுமை நிதியத்தில் நிதி பெற ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்
ADDED : ஆக 24, 2024 11:58 PM

சென்னை:தமிழகத்தில் பசுமை திட்டங்களில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், தமிழக அரசின், 'தமிழக கிரீன் கிளைமேட் பண்டு' எனும், பசுமை காலநிலை நிதியத்தின் கீழ் நிதி பெற ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை, 20 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்து உள்ளன.
தமிழக அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாசு ஏற்படுத்தாமல் செயல்படும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. இதற்காக, தமிழக பசுமை காலநிலை நிதியத்தை சமீபத்தில் துவக்கியது.
அதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை முதலீடு செய்துள்ள, 100 கோடி உட்பட, 2,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது.
இந்த நிதியில் இருந்து காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பசுமை சார்ந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு நிதியுதவி செய்யப்படும்.
இதுவரை, பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் உள்ளிட்ட பல்வேறு பசுமை திட்டங்களில் ஈடுபட்டு உள்ள, 20 நிறுவனங்கள் நிதியுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

