/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வணிக பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து மாநாடு
/
வணிக பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து மாநாடு
ADDED : ஆக 25, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'வணிக பிரச்னைகளுக்கான தீர்வு' என்ற மாநாடு, சென்னையில் நடைபெற்றது.
மாநாட்டில், வணிக பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி, அதற்கான சட்ட வழிகாட்டுதல்கள், வணிக நீதி மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மாநாட்டில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, சுந்தர், தொழில் துறை சிறப்பு செயலர் பல்லவி பல்தேவ், சி.ஐ.ஐ., தலைவர் பொன்னுசாமி, முன்னாள் தலைவர் சந்திரமோகன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செங்கோட்டுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

