/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'டாபர் இந்தியா' - தமிழக அரசு ரூ.400 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : ஆக 23, 2024 01:58 AM

சென்னை:எப்.எம்.சி.ஜி., எனப்படும் விரைவில் விற்பனையாகக் கூடிய நுகர்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள 'டாபர் இந்தியா' நிறுவனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உணவு பூங்காவில், 400 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு மற்றும் டாபர் இந்தியா இடையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, அமைச்சர் ராஜா 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட விபரம்:
தமிழகத்திற்கு டாபர் இந்தியா நிறுவனத்தை வரவேற்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள 'சிப்காட்' உணவு பூங்காவில், தென் மாநிலங்களில் தங்களின் முதல் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாபர் இந்தியா கையெழுத்திட்டது. அந்நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
இதனால், 250க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.
டெல்டா மாவட்டத்திற்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறையை கொண்டு வருவது மகிழ்ச்சி. டாபர் இந்தியா நிறுவனம் தமிழகத்தை தேர்வு செய்ததற்கான முடிவு, நம் மாநிலத்தின் தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வேலைக்கு தயாராக உள்ள தொழிலாளர்களின் இருப்புக்கு சான்று.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.