/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஈவுத்தொகை ரூ.194 எம்.ஆர்.எப்., அறிவிப்பு
/
ஈவுத்தொகை ரூ.194 எம்.ஆர்.எப்., அறிவிப்பு
ADDED : மே 03, 2024 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட 1.28 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில், இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு, கடந்த நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக 194 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிறுவனம் கடந்த நிதியாண்டில் இரண்டு முறை இடைக்கால ஈவுத்தொகையாக 3 ரூபாய் வழங்கிய நிலையில், தற்போது வழங்கவுள்ள 194 ரூபாயையும் சேர்த்தால், கடந்த நிதியாண்டுக்கான பங்குதாரர்களின் மொத்த ஈவுத்தொகை வருவாய் 200 ரூபாயாகும்.