/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆன்லைன் விற்பனையில் போலி மதிப்பீடுகள்
/
ஆன்லைன் விற்பனையில் போலி மதிப்பீடுகள்
ADDED : மே 09, 2024 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பாக, போலி மதிப்பீடுகள் வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, வரும் 15ம் தேதி மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன், விவாதிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மின்னணு வர்த்தக தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான மதிப்பீடுகளை அதிகரிக்கும் நோக்கில், போலியான மதிப்பீடுகளும் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தவறாக வழிகாட்டப்படுகின்றனர். இதையடுத்து போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரக் கட்டுப்பாட்டு விதிகளை இயற்றி வருகிறது.