/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கங்கள் தொடரும்
/
இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கங்கள் தொடரும்
ADDED : மார் 30, 2024 10:02 PM

'எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம், 2024--25 நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 6.80 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணித்துள்ள செய்தி, புதனன்று வெளியானது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கார்களின் எண்ணிக்கை, கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கு முந்தைய அளவிற்கு உயர்ந்துள்ளது என்ற செய்தி, வியாழனன்று வெளியானது.
குடியிருப்புகள் விற்பனை, மார்ச் மாதத்தில் விறுவிறுப்பாக இருந்தது என்ற செய்தி, வெள்ளியன்று வெளியானது.
நிப்டி50 குறியீடானது, 2023--24 நிதியாண்டை, 28.33 சதவீத ஏற்றத்துடன் நிறைவு செய்தது.
வரும் வாரம்@@
எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, 'எம்--3' பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு போன்ற, இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ.,குறியீடு, ஜே.ஓ.எல்.டி., புதிய வேலைவாய்ப்புகள், ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் செவ்வாயன்று, வர்த்தக நாளின் இறுதியில் 92 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, புதனன்று 118 புள்ளிகள் ஏற்றம்; வியாழனன்று 203 புள்ளிகள் ஏற்றம் என்கிற ரீதியிலான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது. கடந்த வாரத்தில், மூன்று நாட்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது.
புதிய நிதியாண்டின் முதல் வர்த்தக வாரத்தை எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த நிதியாண்டின் இறுதி வாரத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற நிலைமையுடனேயே தென்படுகிறது. சந்தை சார்ந்த செய்திகள், தரவுகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே, நிப்டியின் அடுத்த கட்ட பயணத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும். எனவே வர்த்தகர்கள் அதிக கவனத்துடன், குறைந்த எண்ணிக்கையில், குறுகிய நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு முயலவேண்டும்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், வாரத்தின் இறுதியில் நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் நிலவுவதைப் போன்ற சமிக்ஞைகளே உள்ளன. கடந்த ஒரு சில வாரங்களாக சந்தை கண்டுவரும் ஏற்ற இறக்கங்களை கணக்கில் வைத்துப் பார்த்தால், இன்னும் சில நாட்களுக்கு இந்த வித ஏற்ற இறக்கங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 22005, 21675 மற்றும் 21455 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 22565, 22820 மற்றும் 23035 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22260 என்ற அளவிற்கு கீழே இறங்காமல், தொடர்ந்து வர்த்தகமாகி கொண்டிருக்க வேண்டும்.

