/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'கூகுள் வாலட்' இந்தியாவில் அறிமுகம்
/
'கூகுள் வாலட்' இந்தியாவில் அறிமுகம்
ADDED : மே 09, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக தற்போது, 'கூகுள் வாலட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் இணையதள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் 'கூகுள்' நிறுவனம், இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, 'கூகுள் வாலட்' என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இச்செயலியில் பயனர்கள், தங்கள் மெட்ரோ ரயில், திரைப்படம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை சேமிக்க முடியும்.
அத்துடன் போர்டிங் பாஸ், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் சேமித்து, தேவையான நேரத்தில் அவற்றை அணுக முடியும்.